செனட்டர் நம்பிஜின்பா பிரைஸ் நிழல் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், எதிரணியின் புதிய நிழல் அமைச்சரவை பெயரிடப்பட்டுள்ளது.
இதற்கமைய இரு பின்வரிசை உறுப்பினர்களுக்கு நிழல் அமைச்சரவையில் இடமளிப்பதற்கு எதிர்க்கட்சி தலைவர் சூசன் லே நடவடிக்கை எடுத்துள்ளார்.
மேற்கு ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் மெலிசா பிரைஸ், பாதுகாப்புத் துறைக்கான புதிய நிழல் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர் நம்பிஜின்பாவே இப்பதவியை வகித்தார்.
ஸ்கொட் மொரிசனின் ஆட்சியில்பாதுகாப்புத் துறை அமைச்சராக பதவிவகித்த மெலிசா பிரைஸ், சைபர் பாதுகாப்பு மற்றும் அறிவியலுக்கான நிழல் அமைச்சராகவும் செயற்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மே மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு நெஷனல்ஸ் கட்சியில் இருந்து லிபரல் கட்சி பக்கம் செனட்டர் நம்பிஜின்பா பிரைஸ் தாவினார். பின்னர் அவருக்கு நிழல் அமைச்சரவையில் இடமளிக்கப்பட்டிருந்தது.
எனினும், இந்திய சமூகம் ஆஸ்திரேலியாவில் குடியேறுவது தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை அவர் வெளியிட்டு, கடும் விமர்சனங்களுக்கு உள்ளானார். தனது கருத்து தொடர்பில் இந்திய சமூகத்திடம் அவர் மன்னிப்பு கோர மறுத்ததால் நிழல் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார்.
இதனையடுத்தே நிழல் அமைச்சரவை மறுசீரமைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சைமன் கென்னடி செயற்கை நுண்ணறிவுக்கான நிழல் உதவி அமைச்சராக பெயரிடப்பட்டுள்ளார்.