15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தினார் எனக் கூறப்படும் 42 வயது ஆசிரியர் சிட்னி விமான நிலையத்தில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு நேற்று முன்தினம் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய விசாரணை வேட்டை ஆரம்பமாகியது.
சிறுமியை வன்கொடுமைக்கு உட்படுத்தினார் எனக் கூறப்படும் ஆசிரியர் பேர்த் வழியாக தென்னாபிரிக்காவுக்கு தப்பிச்செல்வதற்கு திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையிலேயே அவர் சிட்னி விமானநிலையத்தில் நியூ சவூத் வேல்ஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமியை இவர் பல முறை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியுள்ளார் என தெரியவந்துள்ளது.
இன்று அவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார். அவருக்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது.