வடமேற்கு சிட்னியில் இந்திய உணவகமொன்றில் ஏற்பட்ட வாயு கசிவினால் ஒருவர் பலியாகியுள்ளார். ஐந்து பொலிஸ் அதிகாரிகள் உட்பட அறுவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ரிவர்ஸ்டோனில் உள்ள குறித்த உணவகத்தில் இன்று காலை வாயு கசிவு ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டதையடுத்து அவசர சேவை பிரிவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். பொலிஸ் அதிகாரிகள் ஐவர் உட்பட அறுவர் வாயு தாக்கத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர் 25 வயது இளைஞர் ஒருவர் என நம்பப்படுகின்றது. குறித்த உணவகத்தில் துப்பரவு பணியாளராக அவர் தொழில்புரிந்து வந்துள்ளார்.
குறித்த உணவகம் கடந்த ஏப்ரல் மாதமே திறக்கப்பட்டுள்ளது.