சிட்னி தென்மேற்கில் கார் மோதியதில் ஐந்து மாத பெண் குழந்தையொன்று பலியாகியுள்ளது. அத்துடன், ஐந்து வயது சிறுவரொருவர் படுகாயமடைந்துள்ளார்.
பாதசாரிகள்மீது வாகனம் மோதியுள்ளது என அவசர சேவை பிரிவுக்கு நேற்று மாலை அழைப்பு வந்துள்ளது.
பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தபோது கார் மோதியதில் இரு சிறார்களும் படுகாயமடைந்த நிலையில் காணப்பட்டனர்.
இருவருக்கும் சம்பவ இடத்தில் முதலுதவி அளிக்கப்பட்டாலும் குழந்தை உயிரிழந்துவிட்டது. சிறுவர் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
35 வயது கார் சாரதிக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. விபத்து தொடர்பில் விசாரணை நடந்துவருகின்றது.