ஐ.நா. சபையின் மிகவும் புதுமையான நாடுகளுக்கான ஆண்டு பட்டியலில் சீனா முதல்முறையாக, முதல் 10 இடங்களில் ஒன்றாக நுழைந்துள்ளது. இப்பட்டியலில் ஆஸ்திரேலியா 24 ஆவது இடத்தில் உள்ளது.
ஐரோப்பாவின் மிகப் பெரிய பொருளாதார நாடான ஜேர்மனியை பின்னுக்கு தள்ளியே சீனா முன்னேறியுள்ளது.
உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பான டபிள்யு. ஐ.பி.ஓ., உலகளாவிய புத்தாக்க குறியீடு எனும் ஜி.ஐ.ஐ., கணக்கெடுப்பின்படி, மொத்தம் 78 குறியீடுகளின் அடிப்படையில் 139 நாடுகளின் பொருளாதார நிலையை மதிப்பீடு செய்து, இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
சீனா ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் அதிக முதலீடுகளை செய்திருப்பதன் காரணமாக, இந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2011 முதல் ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்து தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறது. இதற்கு அடுத்தடுத்த இடங்களில் ஸ்வீடன், அமெரிக்கா உள்ளன. இவற்றைத் தொடர்ந்து தென்கொரியா, சிங்கப்பூர், பிரிட்டன், பின்லாந்து, நெதர்லாந்து, டென்மார்க், சீனா அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.