அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியாவின் கோடோரஸ் டவுன்ஷிப்பில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பொலிஸ் அதிகாரிகள் மூவர் பலியாகினர்.
மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. துப்பாக்கிச்சூடு நடத்திய நபரும் சுட்டுக்கொல்லப்பட்டார். சந்தேக நபரின் அடையாளத்தை அதிகாரிகள் வெளியிடவில்லை.
கொல்லப்பட்ட அதிகாரிகள் எந்த சட்ட அமுலாக்க நிறுவனங்களில் பணியாற்றினர் என்பதை அதிகாரிகள்வெளியிட மறுத்துவிட்டனர்.