மேற்கு சிட்னியில் பட்டப்பகலில இருவர்மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று இடம்பெற்ற இச்சம்பவத்தையடுத்து ரயில் பாதையும் தற்காலியமாக மூடப்பட்டது.
மெர்ரிலேண்ட்ஸ் ரயில் நிலையத்துக்கு பொலிஸார் அழைக்கப்பட்டிருந்தனர். 21 மற்றும் 23 வயதுடைய இளைஞர்கள்மீதே இனந்தெரியாத நபர் இவ்வாறு கத்திக்குத்து தாக்குதலை நடத்தி இருந்தார்.
இருவருக்கும் துணை மருத்துவர்களால் முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.
சம்பவம் தொடர்பில் 34 வயது நபரொருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டார். அவரை இன்று பரமட்டா நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.