ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸி இன்று அமெரிக்கா செல்கின்றார்.
இவ்விஜயத்தின்போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை அவர் நேரடியாக சந்திப்பாரென எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆக்கஸ் பாதுகாப்பு கூட்டாண்மை, சீன விவகாரம் உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாக இதன்போது விரிவாக கலந்துரையாடப்படவுள்ளது.
செவ்வாய்க்கிழமை அரச தலைவர்களுக்கு ட்ரம்ப் வரவேற்பளிக்கவுள்ளார்.
பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பது தொடர்பான தமது நாட்டு நிலைப்பாட்டை பிரதமர் அல்பானீஸி ஐ.நா. கூட்டத்தொடரின்போது வெளியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.