பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பது தொடர்பில் ஆஸ்திரேலியாவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் அதற்கு ஆஸ்திரேலியாவில் வாழும் யூத சமூகம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
இப்படியான அறிவிப்புகள் இஸ்ரேல் மற்றும் ஹமாசுக்கு இடையிலான மோதலை மேலும் மோசமாக்கும் என ஆஸி. யூதர்களின் நிர்வாகக் குழு அறிவித்துள்ளது.
எதிர்காலத்தில் அமையும் பாலஸ்தீன நிர்வாகத்தில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் ஒதுக்கி வைக்கப்படுவார்கள் என்பதற்குரிய உறுதியான உத்தரவாதம் வழங்கப்படாத நிலையில், இம்முடிவு எடுக்கப்பட்டமை தவறாகும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
அதேவேளை, இஸ்ரேல்மீது ஆஸ்திரேலியா இன்னும் அதிகமாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஆஸி. வாழ் பாலஸ்தீன சமூகம் வலியுறுத்தியுள்ளது.
இனப்படுகொலையில் ஈடுபட்ட இஸ்ரேலுக்கு எதிராக தடைகள் அவசியம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.