“ பாலஸ்தீனம் என்ற நாடே இருக்காது. எங்கள் நாட்டின் மையப்பகுதியில் ஒரு பயங்கரவாத அரசை திணிக்கும் முயற்சிக்கான பதில் வழங்கப்படும்.”
இவ்வாறு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“ அக்டோபர் 7 அன்று நடந்த கொடூரமான படுகொலைக்குப் பிறகு பாலஸ்தீன அரசை அங்கீகரித்து வரும் தலைவர்களுக்கு நான் ஒன்றை கூறி கொள்கிறேன்.
நீங்கள் பயங்கரவாதத்திற்கு மகத்தான பரிசை வழங்குகிறீர்கள். ஆனால் அது நடக்கப்போவதில்லை.” – எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஜோர்தான் நதிக்கு மேற்கே பாலஸ்தீன அரசு இருக்காது. பல ஆண்டுகளாக, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்து வரும் மிகப்பெரிய அழுத்தங்களுக்கு எதிராக, அந்தப் பயங்கரவாத அரசு உருவாவதை நான் தடுத்திருக்கிறேன். இதை நாங்கள் உறுதியுடனும், சாதுர்யமான அரசியல் திறமையுடனும் செய்துள்ளோம். மேலும், யூதக் குடியேற்றத்தை இரட்டிப்பாக்கியுள்ளோம், மேலும் இந்தப் பாதையில் நாங்கள் தொடர்ந்து செல்வோம்.” எனவும் இஸ்ரேல் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.