காசாவில் ஏற்பட்ட மனிதாபிமான பேரழிவுக்கு இஸ்ரேல் பொறுப்புக்கூற வேண்டும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸி ஐ.நாவில் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், மனிதாபிமான பணியாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோர் தாக்குதல்களில் கொல்லப்பட்ட சம்பவத்தையும் அவர் வன்மையாகக் கண்டித்தார்.
பாலஸ்தீனத்தில் மேற்கு கரையில் பலவந்தமாக இடம்பெறும் இஸ்ரேல் குடியேற்றம் மற்றும் ஆக்கிரமிப்பு செயற்பாடுகளையும் ஆஸி. பிரதமர் கடுமையாக விமர்சித்தார்.
அதேவேளை, ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிரதேசங்கள் குறித்த விசாரணை ஆணையம் சுட்டிக்காட்டியது போல, காசாவில் என்ன நடக்கிறது என்பதை விவரிக்க இனப்படுகொலையை விட பொருத்தமான வழி இல்லை என்று பிரேசில் ஜனாதிபதி தெரிவித்தார்.
" காசாவில் நடப்பது பாலஸ்தீன மக்களை அழிப்பது மட்டுமல்ல, அவர்களின் ஒரு தேசக் கனவை அழிக்கும் முயற்சியாகும்." - எனவும் சுட்டிக்காட்டினார்.
" ஹமாஸ் மற்றும் பிற பிரிவுகள் தங்கள் ஆயுதங்களை பாலஸ்தீன அதிகாரசபையிடம் ஒப்படைக்க வேண்டும்." - என்று ஒன்லைன்மூலம் மாநாட்டில் உரையாற்றிய பாலஸ்தீன ஜனாதிபதி வலியுறுத்தினார்.