லிபரல் கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சியின்கீழ் பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பது தொடர்பான ஆஸ்திரேலியாவின் தீர்மானம் மீளப்பெறப்படும் என்று எதிர்க்கட்சி தலைவர் சூசன் லே அறிவித்துள்ளார்.
அமெரிக்க குடியரசுக் கட்சியினருக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சரிடமும் எதிர்க்கட்சி தலைவர் சூசன் லே தெளிவுபடுத்தியுள்ளார்.
இதற்காக சூசன் லேவுக்கு நன்றி தெரிவித்த இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சர், அவரை இஸ்ரேல் வருமாறும் அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில் வெளிவிவகாரக் கொள்கையில் எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பற்ற விதத்தில் செயற்படுகின்றார் என வெளிவிவகார அமைச்சர் பெனி வோங் குறிப்பிட்டார்.