சிட்னியில் இவ்வருட ஆரம்பத்தில் நடந்த பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தின்போது கிறீன்ஸ் கட்சி உறுப்பினர் ஹன்னா தாமஸின் முகத்தில் தாக்கினார் எனக் கூறப்படும் பொலிஸ் அதிகாரி, சட்ட நடவடிக்கையை எதிர்கொண்டுள்ளார்.
ஜனவரி 27 ஆம் திகதி சிட்னியில் நடந்த போராட்டத்தின்போது பெரும் களேபரம் இடம்பெற்றது. இதன்போதே செனட்டர் தாக்குதலுக்கு இலக்கானார். அவரது கண்ணொன்று கடுமையாக பாதிக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பில் குறித்த பொலிஸ் அதிகாரி இன்று கைது செய்யப்பட்டார். அவர்மீது தாக்குதல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இவர் எதிர்வரும் நவம்பர் 18 ஆம் திகதி நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.