சிட்னி வங்கியில் கத்தி முனையில் கொள்ளை: பெண் கைது!
சிட்னி தெற்குப் பகுதியிலுள்ள வங்கியொன்றில் கத்திமுனையில் கொள்ளையடிக்க முற்பட்ட பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடையொன்றில் கத்தியை களவாடிய பிறகே நேற்று முற்பகல் இவர் வங்கிக் கொள்ளையில் ஈடுபட சென்றுள்ளார்.
வங்கிக்குள் நுழைந்த 38 வயதான பெண், கத்தியைக் காட்டி வங்கி ஊழியர்களை மிரட்டி பணம் கேட்டுள்ளார். எனினும், சில நிமிடங்களுக்குள் சம்பவ இடத்தக்கு வந்து பொலிஸார் இப்பெண்ணை கைது செய்தனர்.
அவரிடமிருந்து இரு கத்திகள் மீட்கப்பட்டுள்ளன. பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துசெல்லப்பட்டு அப்பெண் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இன்றைய தினம் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.