அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸி ஆகியோருக்கிடையிலான இரு தரப்பு நேரடி சந்திப்புக்கு நாள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இரு நாட்டு தலைவர்களும் எதிர்வரும் ஒக்டோபர் 20 ஆம் திகதி வெள்ளை மாளிகையில் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளனர்.
ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தொடர் அமெரிக்காவில் நடந்துவருகின்றது. இம்மாநாட்டின்போது ட்ரம்ப் பேச்சு நடத்தவுள்ள உலகத் தலைவர்களின் பட்டியலில் ஆஸி. பிரதமரின் பெயர் இடம்பெற்றிருக்கவில்லை.
இது பற்றி ஆராய்ந்தபோதே ட்ரம்ப் மற்றும் அல்பானீஸி ஆகியோருக்கிடையிலான சந்திப்பு அடுத்த மாதம் நடக்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும், அமெரிக்கா சென்றுள்ள அரச தலைவர்களுக்கு ட்ரம்ப் வழங்கவுள்ள விருந்துபசாரத்தின்போது ட்ரம்ப், அல்பானீஸி நட்பு ரீதியில் சந்திக்கக்கூடும் என தெரியவருகின்றது.