மெல்பேர்ண் வடமேற்கிலுள்ள வீடொன்றில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் நால்வர் எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இவர்களில் தந்தை மற்றும் மகன் ஆகியோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
நேற்றிரவு 9.25 மணியளவிலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 'ஒயில் ஹீட்டர்" இல் ஏற்பட்ட கோளாறால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
32 வயதான ஜேம்ஸ் என்பவரும், அவரின் 7 வயது மகனான கெய்ன் என்பவருமே ஆபத்தான நிலையில் உள்ளனர். மனைவி மற்றும் ஏனைய இரு பிள்ளைகளின் நிலைமை சீராக உள்ளது.
தமது குடும்ப உறுப்பினர்களை ஜன்னல் வழியாக வீட்டை விட்டு தந்தையே வெளியேற்றியுள்ளார். அதனால்தான் அவர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்.