சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி மால் லான்யோன், நியூ சவூத் வேல்ஸ் மாநிலத்தின் 24 ஆவது பொலிஸ் ஆணையாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் ஆணையாளராக பதவி வகித்த பெண் பொலிஸ் அதிகாரி கரேன் வெப், தனது பதவி காலம் முடிவடைவதற்கு பல மாதங்களுக்கு முன்னரே பதவி விலகலை அறிவித்துவிட்டார்.
இந்நிலையிலேயே புதிய ஆணையாளராக மால் லான்யோன் பெயரிடப்பட்டுள்ளார்.
பொறுப்புக்கூறல் மற்றும் நேர்மையுடன் தனது பணியை தொடரவுள்ளதாக அவர் ஊடகங்களிடம் அறிவித்துள்ளார்.
எதிர்வரும் 30 ஆம் திகதி அவர் தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.