மெல்பேர்ண் நகரில் பாதசாரியை மோதிவிட்டு காரில் தப்பிச்சென்ற சிறார்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கார் மோதியதில் படுகாயமடைந்த பெண் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
வாகனமொன்று முறையற்ற விதத்தில் செலுத்தப்படுவதை அவதானித்த பொலிஸார், அதனை பின்தொடர முற்பட்டனர்.
அவ்வேளையில் குறித்த வாகனம் வேகமாக பயணிக்க முற்பட்டுள்ளது. அவ்வேளையில் வீதியில் இருந்த பெண்ணையும் மோதித்தள்ளிவிட்டு பயணித்துள்ளது.
பொலிஸார் துரத்தி செல்லும்போது, காரை இடைநடுவில் விட்டுவிட்டு அதில் பயணித்தவர்கள் தப்பியோடியுள்ளனர். தேடுதல் வேட்டையின் பின் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
15,16 மற்றும் 17 வயதுடைய சிறார்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. குறித்த கார் கிழக்கு மெல்பேர்ணில் நேற்று களவாடப்பட்டது என்பது தெரியவந்துள்ளது.