ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய சுரங்க நிறுவனமான பி.எச்.பி. யிடமிருந்து இரும்புத் தாது இறக்குமதி செய்வதற்கு சீனா தற்காலிக தடை விதித்துள்ளது.
விலை நிர்ணய சர்ச்சைக்கு மத்தியிலேயே இத்தடை அமுலுக்கு வந்துள்ளது என சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் இந்த முடிவு கவலை அளிக்கின்றது என ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸி தெரிவித்தார். இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண விரும்புவதாகவும் அவர் கூறினார்.
' ஆஸ்திரேலிய இரும்புத் தாது தடையின்றி சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுவதை நான் காண விரும்புகிறேன். அது முக்கியமானது, இது சீனாவின் பொருளாதாரத்திற்கு மட்டுமல்ல, ஆஸ்திரேலியாவிற்கும் பெரும் பங்களிப்பை அளிக்கிறது." எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.