விக்டோரியாவில் லொறி மோதியதில் 15 வயது பாடசாலை மாணவரொருவர் பலியாகியுள்ளார்.
இன்று காலை 8.30 மணியளவிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது என்று விக்டோரியா பொலிஸார் தெரிவித்தனர்.
தனியார் பாடசாலைக்கு செல்வதற்குரிய வழியை கடக்க முற்படுகையிலேயே அவர்மீது லொறி மோதியுள்ளது. சம்பவ இடத்திலேயே உரிழந்துள்ளார்.
லொறி சாரதியிடம் பொலிஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.