பிரதமர் அந்தோனி அல்பானீஸி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சூசன் லே உள்ளிட்ட ஆஸ்திரேலியாவின் பிரபல அரசியல் வாதிகளின் தொலைபேசி இலக்கங்கள் இணையத்தில் கசியவிடப்பட்ட விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுவருகின்றது.
அமெரிக்காவை தளமாகக்கொண்டியங்கும் வலைத்தளமொன்றிலேயே குறித்த எண்கள் கசிந்துள்ளன. மில்லியன் கணக்காணவர்களின் தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல்களை குறித்த வலைத்தளம் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது பற்றி அரசு அறிந்திருப்பதாகவும், அதனை சீர்செய்வதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.
எப்போதில் இருந்து மேற்படி தகவல்கள் இணையத்தளத்தில் உள்ளன என்பது பற்றி சரியான தகவல் இல்லை. எனினும், கடந்த மாதம் முதல் ஒன்லைனின் காட்சிப்படுத்தப்படடிக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
ஊடகங்கள் தன்னை தொடர்புகொண்ட பின்னரே இது பற்றி தெரியவந்தது என எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார். தகவல்களை நீக்குமாறு வலைத்தளத்திடம் கோரப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.