" நாடாளுமன்றத்தை எரித்துவிடுவேன்." என்று சுயாதீன செனட்டர் லிடியா தோர்ப் விடுத்துள்ள எச்சரிக்கை தொடர்பில் நாடாளுமன்றமும் விசாரணைக்குழு அமைத்து, விசாரிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சூசன் லே வலியுறுத்தியுள்ளார்.
மேற்படி சம்பவம் தொடர்பில் கூட்டாட்சி பொலிஸார் விசாரணை நடத்தி வரும் நிலையிலேயே மற்றுமொரு விசாரணையும் கோரப்பட்டுள்ளது.
இது தொடர்பில் செனட் தலைவர் மற்றும் சபாநாயகர் ஆகியோருக்கு எதிர்க்கட்சி தலைவர் கடிதம் எழுதியுள்ளார்.
பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் உரையாற்றுகையிலேயே சுயாதீன செனட்டர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார். அவரின் அந்த கருத்து ஆஸ்திரேலிய அரசியல் வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.