மத்திய குயின்ஸ்லாந்தில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் பலியாகியுள்ளனர் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
வீடொன்றில் தீ பரவல் ஏற்படுவது தொடர்பில் இன்று காலை அவசர சேவை பிரிவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது .
தீயணைப்பு பிரிவினர் சம்பவ இடத்துக்கு விரையும்போது இரு மாடிகளைக்கொண்ட வீடு முழுமையாக பற்றியுள்ளது.
கடும் போராட்டத்துக்கு மத்தியில் காலை 7.20 மணியளவில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. வீட்டுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
தீ விபத்துக்கான காரணம் மற்றும் உயிரிழந்தவர்களின் அடையாளம் தொடர்பில் தற்போது விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.