பப்புவா நியூ கினியாவில் கிராமப்புற வைத்தியசாலையொன்றில் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள், சிகிச்சைக்காக விமானம்மூலம் சிட்னிக்கு கொண்டுவரப்படவுள்ளனர்.
குறித்த இரு இரட்டை ஆண் குழந்தைகள் கடந்த வெள்ளிக்கிழமை கிராமப்புற வைத்தியசாலையில் பிறந்துள்ளன.
ஒட்டிப் பிறந்த இவர்கள் உயிரிழந்துவிடுவார்கள் என்றே ஆரம்பத்தில் நம்பப்பட்டது. எனினும், ஆரம்பக்கட்ட சிகிச்சைமூலம் தற்போது நலமாக உள்ளனர்.
இந்நிலையிலேயே மேலதிக சிகிச்சைக்காக சிட்னி கொண்டுவரப்படவுள்ளனர்.
குழந்தைகள் ஒட்டிப் பிறப்பது அரிது. அவ்வாறு பிறந்தாலும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இறந்துவிடுகின்றன. எனவே, இவர்கள் உயிருடன் இருப்பது ஆச்சரியம் என வைத்தியர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் அறுவை சிகிச்சைக்காகவே குழந்தைகள் சிட்னிக்கு கொண்டுவரப்படவுள்ளனர்.