ஆஸ்திரேலியாவுக்கு 150 மில்லியன் டொலர்கள் மதிப்புள்ள ஐஸ் போதைப்பொருளை இறக்குமதி செய்ய முற்பட்ட மெல்பேர்னை சேர்ந்த நபருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 40 வயதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டது.
விக்டோரியா நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இடம்பெற்று வந்த நிலையில், இன்று மேற்படி தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் இருந்தே மிகவும் சூட்சுமமான முறையில் ஐஸ் போதைப்பொருள் கடத்திவரப்பட்டுள்ளது. அதனை பொலிஸார் கைப்பற்றினர்.