ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அபல்பானீஸி மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருக்கிடையிலான இரு தரப்பு சந்திப்பின்போது கனிம ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் தெரிவித்தார்.
பிரதமர் அல்பானீஸி எதிர்வரும் 20 ஆம் திகதி ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்கின்றார். இதற்கு முன்னதாக அமெரிக்கா சென்றுள்ள பொருளாளர் ஜிம் சால்மர்ஸ், முக்கியத்துவமிக்க முன்னேற்பாட்டு சந்திப்புகளை நடத்திவருகின்றது.
இந்நிலையில் வாஷிங்டனில் இருந்து ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார்.
' அமெரிக்க நிறுவனங்களுக்கு கனிமங்கள் மிகவும் தேவை என்பதை நாங்கள் அறிவோம்,
மேலும் அந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய ஆஸ்திரேலியா மிகவும் சிறப்பாக உள்ளது. இரு நாட்டு தலைவர்களுக்கிடையிலான சந்திப்பின் ஒரு அங்கமாக இவ்விவகாரம் இருக்கும்." என்றும் ஜிம் சால்மர்ஸ் குறிப்பிட்டார்.