நெஷனல்ஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், துணை பிரிமியருமான பர்னபி ஜாய்ஸ், அடுத்த தேர்தலில் நியூ சவூத் வேல்ஸ், நியூ இங்கிலாந்து தொகுதியில் போட்டியிடப்போவதில்லை என அறிவித்துள்ளார்.
நெஷனல்ஸ் கட்சியின் தற்போதைய தலைமையுடன் தனக்கு உள்ள உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையிலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
கட்சிக்குள் ஓரமாக ஒதுங்கி - முடங்கி கிடப்பதற்கு விரும்பவில்லை, விரைவில் அடுத்தக்கட்ட நகர்வுகள் பற்றி அறிவிக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.