ஏ.ஐ. சாட்போட்கள் ஆஸ்திரேலிய சிறார்களுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது என கல்வி அமைச்சர் ஜேசன் கிளேர் கவலை வெளியிட்டுள்ளார்.
சிறார்கள் தற்கொலைக்கு தூண்டப்படும் நிலை காணப்படுவதாகவும், கொடுமைப்படுத்தல் இடம்பெறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
' சிறார்கள், சிறார்களை கொடுமைப்படுத்துவதில்லை, எனினும், ஏ.ஐ. அவர்களை கொடுமைப்படுத்துகிறது, அவர்களை அவமானப்படுத்துகிறது, காயப்படுத்துகிறது, அவர்கள் தோல்வியடைந்தவர்கள் என்று சொல்கிறது...தற்கொலைக்கு தூண்டுகின்றது. இது பயங்கரமானது." எனவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த அச்சுறுத்தல்களில் இருந்து சிறார்களை பாதுகாப்பதற்குரிய வேலைத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர், மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு பயிற்சி வழங்குவதற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.