ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பானீஸி இன்று அமெரிக்கா செல்லும் நிலையில், அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடன் முக்கியத்துவமிக்க சந்திப்பில் ஈடுபடவுள்ளார்.
இரு நாட்டு தலைவர்களுக்குமிடையிலான சந்திப்பு அமெரிக்க நேரப்படி நாளை காலை நடைபெறவுள்ளது.
வரி விவகாரம் மற்றும் ஆக்கஸ் பாதுகாப்பு ஒப்பந்தம் உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாக இதன்போது விரிவாக கலந்துரையாடப்படவுள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையில் கனிம ஒப்பந்தமும் கைச்சாத்திடப்படவுள்ளது.
கனிம ஒப்பந்தத்துக்கு அமெரிக்கா சீனாவை நம்பியுள்ள நிலையில், அதனை சீராக்கும் வகையிலேயே இதற்குரிய நகர்வு இடம்பெறுகின்றது.
அதேவேளை, உக்ரைன், ரஷ்ய போர் பற்றியும் இரு நாட்டு தலைவர்களும் கலந்துரையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.