மெல்பேர்ணில் நேற்று நடைபெற்ற குடியேற்ற எதிர்ப்பு பேரணியின்போது போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் கையாண்ட அணுகுமுறையை விக்டோரியா பொலிஸ்துறை அமைச்சர் நியாயப்படுத்தியுள்ளார்.
பெருந்திரளான போராட்டக்காரர்கள் பங்கேற்று குழப்பம் விளைவிக்கும் வகையில் செயற்பட்டதால் ரப்பர் தோட்டா பயன்பாடு மற்றும் பெப்பர் ஸ்பிரே தெளிப்பு போன்ற அதிகாரத்தை பொலிஸார் பயன்படுத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் வன்முறையில் ஈடுபட்ட குழுவினரை கட்டுப்படுத்த முற்படும்போது ஏற்பட்ட தள்ளு முள்ளில் சிக்கி இரு பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். 30 வயதான ஆண் பொலிஸ் அதிகாரி ஒருவரும், 40 வயதான பெண் பொலிஸ் அதிகாரி ஒருவருவே காயமடைந்துள்ளனர்.
பொலிஸ் அதிகாரிகள்மீது கற்கள், கண்ணாடி போத்தல்கள் மற்றும் அழுகிய போத்தல்கள் என்பன வீசப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் 30 வயது பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைகள் தொடர்கின்றன.