ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவுக்கிடையில் 8.5 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான கனிம ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸி மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
அடுத்த ஆறு மாதங்களுக்குள் இதற்குரிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
சீனாவின் சந்தை பிடியை தளர்த்தும் வகையிலேயே இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கனிம ஏற்றுமதிகளுக்குரிய கட்டுப்பாடுகளை கடந்த மாதம் சீனா அதிகரித்தது. இதற்கு ட்ரம்ப் கடும் அதிருப்தி வெளியிட்டிருந்தார். இவ்வாறானதொரு பின்புலத்திலேயே மேற்படி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இது தொடர்பில் ட்ரம்ப் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.