ஆக்கஸ் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் உறுதியளிக்கப்பட்டதன் பிரகாரம் ஆஸ்திரேலியாவுக்கு அமெரிக்கா அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை வழங்கும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதியளித்துள்ளார்.
ஆஸ்திரேலிய பிரதமருடன் நடைபெற்ற நேரடி சந்திப்பின்போதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கிடையிலான பாதுகாப்பு கட்டமைப்பே ஆக்கஸ் எனப்படுகின்றது. இந்த ஒப்பந்தத்தின்கீழ் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை பெறுவதற்கு ஆஸ்திரேலியா திட்டமிட்டிருந்தது.
எனினும், ட்ரம்ப் நிர்வாகத்தின்கீழ் மேற்படி ஒப்பந்தம் மீளாய்வு செய்யப்படும் என தகவல் வெளியானது. இதனால் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் கிடைக்குமா என்ற கவலை கன்பராவுக்கு எழுந்தது.
இந்நிலையிலேயே மேற்படி உறுதிமொழியை ட்ரம்ப் வழங்கியுள்ளார். இது அல்பானீஸி அரசுக்கு கிடைக்கப்பெற்ற வெற்றியாகக் கருதப்படுகின்றது.