சர்ச்சைக்குரிய தென்சீனக் கடல் பகுதியில் நடந்த அத்துமீறல் சம்பவம் தொடர்பில் ஆஸ்திரேலியா மற்றும் சீனாவுக்கிடையிலான சொற்போர் உக்கிரமடைந்துள்ளது.
மேற்படி சம்பவம் குறித்து ஆஸ்திரேலிய பாதுகாப்பு படை அபத்தமான பிரசாரத்தை முன்னெடுப்பதாக பீஜிங் குற்றஞ்சாட்டியுள்ளது.
தென்சீனக் கடல்பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட ஆஸ்திரேலிய கண்காணிப்பு விமானம், தமது நாட்டு வான்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்தது என சீனா கடும் சீற்றத்தை வெளிப்படுத்தியது.
இது தமது நாட்டின் இறைமையை மீறும் செயல் எனவும் கண்டித்திருந்தது.
எனினும், சர்வதேச வான் பரப்பிலேயே தாம் கண்காணிப்பில் ஈடுபட்டதாகவும், சீPன விமானங்களே அச்சுறுத்தும் விதத்தில் செயற்பட்டன எனவும் ஆஸ்திரேலிய பாதுகாப்பு படை தெரிவித்திருந்தது.
இந்நிலையிலேயே இது விஷமத்தனமான பிரச்சாரம் என கன்பராமீது விமர்சனக் கணைகளைத் தொடுத்துள்ளது பீஜிங்.
'அத்துமீறலை ஆஸ்திரேலியா நிறுத்த வேண்டும், இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவை சீர்குலைக்கும் விதத்தில் ஆஸ்திரேலியா செயற்படக்கூடாது." என்று சீனா பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் ஒருவர் வலியுறுத்தினார்.