ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸி பயணித்த விமானம் அமெரிக்காவில் அவசரமாக தரையிறங்கியது.
ஆஸ்திரேலிய விமானப்படை அதிகாரியொருவருக்கு விமானத்துக்குள் ஏற்பட்ட திடீர் விபத்தையடுத்தே விமானம் இவ்வாறு அவசரமாக தரையிறப்பட்டுள்ளது.
வாஷிங்டனில் இருந்து ஆஸ்திரேலியா நோக்கி வந்துகொண்டிருந்த விமானம் நேற்று மாலை மிசோரியின் செயிண்ட் லூயிஸில் தரையிறங்கிய பின்னர், குறித்த அதிகாரி சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் அல்பானீஸி இன்று நாடு திரும்புகின்றார்.
அவரது வாஷிங்டன் பயணம் வெற்றியளித்துள்ளது என அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர.