வணிக நிறுவனங்களிலிருந்து சுமார் ஒரு மில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களைத் திருடிய கும்பலைச் சேர்ந்த மூவர், விந்தாம் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர் வணிகக் கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக 10 மாத விசாரணைக்குப் பிறகே இக்கைது இடம்பெற்றுள்ளது.
புலனாய்வாளர்கள் நேற்று அல்பன்வேல், கெய்ர்ன்லியா மற்றும் ஹாப்பர்ஸ் கிராசிங்கில் உள்ள குடியிருப்பு சொத்துக்களில் சோதனைகளை மேற்கொண்டிருந்தனர்.
மூன்று துப்பாக்கிகள், 2 கிலோ கஞ்சா மற்றும் 30 கிராம் ஐஸ் போதைப்பொருள் உட்பட திருடப்பட்டதாகக் கூறப்படும் இரண்டு வாகனங்களையும், அதிக அளவு திருடப்பட்ட பல பொருட்களை அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
26 வயதான கெய்ர்ன்லியா நபர் மீது வீடு உடைத்து நுழைந்தல் அல்லது வீட்டை உடைத்தல் என்றும் அழைக்கப்படும் கொள்ளை திருட்டு சம்பந்தமாகவும் மோட்டார் வாகனத் திருட்டு , துப்பாக்கி வைத்திருத்தல், வெடிமருந்துகள் வைத்திருத்தல், கஞ்சா வைத்திருத்தல் மற்றும் மெத்தில்பேட்டமைன் வைத்திருத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
43 வயதான அல்பன்வேல் நபர் மீது மோட்டார் வாகன திருட்டு, போலி துப்பாக்கி வைத்திருத்தல், தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை வைத்திருத்தல், கஞ்சா வைத்திருத்தல் மற்றும் மெத்தில்ஆம்பெட்டமைன் வைத்திருந்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
29 வயதான ஹாப்பர்ஸ் கிராசிங் நபர் மீது வீட்டுக் கொள்ளை மற்றும் கஞ்சா வைத்திருந்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
அவர்கள் இருவரும் ஏப்ரல் 17, 2026 அன்று விந்தாம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ஜாமீன் பெற்றனர்.