கிளாட்ஸ்டோனிலுள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் பலியான சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர்மீது தீ வைப்பு மற்றும் கொலைக்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
ஒக்டோபர் 15 ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவத்தில் 36 வயதான பெண்ணொருவரும், 12 மற்றும் 13 வயதுடைய இரு சிறார்களுமே பலியாகினர்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்றுவந்த நிலையில், 37 வயது பெண்ணொருவர் இன்று பிரிஸ்பேனில் கைது செய்யப்பட்டார். பிரிஸ்பேன் நீதிமன்றத்தை அவரை முற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.