தென் சீனக் கடலில் சீன படை நடந்துகொண்ட விதம் தொடர்பில் சீன பிரதமரிடம், ஆஸ்திரேலிய பிரதமர் கவலை வெளியிட்டுள்ளார்.
மலேசியாவில் நடைபெறும் ஆசியான் மாநாட்டில் பங்கேற்றுள்ள ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸி மற்றும் சீன பிரதமர் லி கியாங் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது.
தென்;சீனக் கடல் பகுதியில் ரோந்து சென்ற ஆஸ்திரேலிய கண்காணிப்பு விமானத்;தை அச்சுறுத்தும் விதத்தில், சீன விமானங்களை தீப்பிளம்புகளை வெளியிட்டிருந்தன.
இச்சம்பவம் தொடர்பில் ஆஸ்திரேலியா கடும் கண்டனம் வெளியிட்டிருந்தது. எனினும், தமது வான் பரப்புக்குள் ஆஸ்திரேலிய விமானமே அத்துமீறி நுழைந்தது என சீனா தெரிவித்திருந்தது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே இரு நாடுகளின் பிரதமர்களுக்கிடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது விமான விவகாரம் பற்றியும் பேசப்பட்டுள்ளது.
அதேவேளை, வர்த்த உறவு சம்பந்தமாக ஆராயப்பட்டுள்ளது. இச்சந்திப்பு தொடர்பில் ஆஸ்திரேலிய பிரதமர் தனது எக்ஸ் தள பதிவில்,
“பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கு சீனாவுடனான ஆஸ்திரேலியாவின் உறவு முக்கியமானது.
சீனாவுடனான வர்த்தகத்தை மீண்டும் கொண்டுவருவதற்கான எங்கள் பணி ஏற்கனவே ஆஸ்திரேலிய தொழிலாளர்கள் மற்றும் வணிகங்களுக்கு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனா எங்கள் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளி, அது மாறாது.
பிரதமர் லீ உடனான இன்றைய சந்திப்பு எங்கள் உறவை தொடர்ந்து நிலைநிறுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக அமைந்தது. “ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.