குயின்ஸ்லாந்து காவல்துறையின் பிரதி ஆணையாளர் ஷேன் செலபி (Shane Chelepy), ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
மாநிலத்தின் உயர் காவல்துறை அதிகாரிகளில் ஒருவரான இவர், காவல்துறை சேவையில் 4 தசாப்தகால அனுபவத்தை கொண்டவராவார்.
கொரோனா பெருந்தொற்று காலப்பகுதியிலும் முக்கிய பாத்திரத்தை வகித்துள்ளார்.
அவரின் ஓய்வையடுத்து புதிய காவல்துறை ஆணையாளராக நியமிக்கப்படவுள்ளவரின் பெயர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.