ஆஸ்திரேலியாவில் செப்டம்பர் காலாண்டுக்கான பணவீக்கம் அதிகரித்துள்ளது. இதற்கமைய ஜுன் காலாண்டில் 2.1 சதவீதமாக இருந்த நுகர்வோர் விலைச் சுட்டெண் செப்டம்பர் காலாண்டில் 3.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.
பொருளாதார நிபுணர்கள் எதிர்பார்த்ததைவிடவும் பண வீக்கம் எகிறியுள்ளது.
மத்திய வங்கியின் நிதிச்சபைக் கூட்டம் அதன் ஆளுநர் தலைமையில் எதிர்வரும் 4 ஆம் திகதி கூடவுள்ளது. பணவீக்கம் அதிகரித்துள்ளதால் வட்டி வீத குறைப்புக்கு சாத்தியமில்லை என தெரியவருகின்றது.