சிரியாவில் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட முயற்சித்தார் எனக் கூறப்படும் பிரிஸ்பேன் நபருக்கு குயின்ஸ்லாந்து உச்ச நீதிமன்றத்தால் 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
35 வயதான குறித்த நபர் நான்கரை வருடங்கள் சிறை தண்டனையை எதிர்கொண்ட பின்னரே பிணைகோரி விண்ணப்பிக்க முடியும்.
2016 - 2017 ஆம் ஆண்டுகளில் சிரியாவுக்குள் நுழைந்து பஷார் - அல் - அசாத் தலைமையிலான அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்குரிய போராட்டத்தில் ஈடுபடுவதற்கு இவர் திட்டமிட்டிருந்தார் எனவும், இதற்காக பல நடவடிக்கைகளை முன்னெடுக்க தயாரானார் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
பெடரல் பொலிஸார், புலனாய்வு பிரிவு மற்றும் குயின்ஸ்லாந்து பொலிஸார் இணைந்து முன்னெடுத்த விசாரணைகளின் பிரகாரமே இது கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த நபர் 2018 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். கொரில்லா போர் புத்தகம் மற்றும் பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் புத்தகங்கள் உட்பட மேலும் பல பொருட்கள் மீட்கப்பட்டன.
தமக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை 2024 மே 30 ஆம் திகதி அவர் ஏற்றுக்கொண்டார். இந்நிலையிலேயே நேற்று சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.