முதியோர் பராமரிப்பு நிலையத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர், 104 வயது முதியவரிடமிருந்து டெபிட் கார்ட்டை களவாடி, ஆயிரக்கணக்கான டொலர்களை செலவளித்துள்ளார் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
பெண் ஊழியர் ஒருவரே, இவ்வாறு கார்ட்டை களவாடி, ஆகஸ்ட் 19 முதல் 21 ஆம் திகதிவரை கொள்வனவு நடவடிக்கைகளுக்காக பணத்தை பயன்படுத்தியுள்ளார் என குயின்ஸ்லாந்து பொலிஸார் தெரிவித்தனர்.
32 வயதான இப் பெண் கைது செய்யப்பட்டு, அவருக்கு எதிராக 40 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் 11 ஆம் திகதி கிளீவ்வேண்ட் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.