கிரிக்கெட் வலை பயிற்சியின்போது கழுத்து பகுதியில் பந்துபட்டு படுகாயமடைந்த இளம் கிரிக்கெட் வீரர், வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
மெல்பேர்ண் கிழக்கு பகுதியிலேயே நேற்று முன்தினம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தையடுத்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துவிட்டார் என அவர் அங்கம் வகித்த விளையாட்டுக்கழகம் தெரிவித்துள்ளது.
தலைக்கவசம் அணிந்தே இவர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். எனினும், கழுந்து பகுதியில் பந்து பட்டு படுகாயமடைந்துள்ளார்.
பென் ஆஸ்டின் என்ற 17 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.