சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்;ட் டிரம்ப் இன்று தென்கொரியாவில் சந்தித்து பேச்சு நடத்த திட்டமிட்டுள்ளார்.
ஆசிய நாடான தென் கொரியாவின் ஜியாங்ஜு நகரில், ஆசிய - பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு அக்டோபர் 31ம் திகதி மற்றும் நவம்பர் 1ல் நடைபெறவுள்ளது.
இதில் பங்கேற்பதற்காக தென்கொரியா சென்றுள்ள டிரம்ப், அங்கு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை இன்று (அக்.30ல்) சந்தித்து பேச உள்ளார்.
ஆறு ஆண்டுகளுக்கு பின் நடைபெற உள்ள இந்த சந்திப்பின்போது அமெரிக்காவின் வரிவிதிப்பு விவகாரம் மற்றும் வர்த்தக போர் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து பேச இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.