சிறார்களை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் எனக் கூறப்படும் வழக்குடன் தொடர்புபட்ட பௌத்த துறவி, குற்றவாளியென நிரூபிக்கப்பட்டுள்ளது.
மெல்பேர்ண் நீதிமன்றத்தில் இடம்பெற்றுவந்த வழக்கு விசாரணையிலேயே 70 வயதான நாவோதுன்னே விஜிதா என்ற பௌத்த துறவி, குற்றவாளியென்பது நிரூபனமாகியுள்ளது.
12 வயதுக்குட்பட்ட ஆறு சிறார்கள், விகாரை குடியிருப்பு, பிரார்த்தனை அறை மற்றும் அறநெறி வகுப்பு என்பவற்றுக்குள் வைத்தே இவரால் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என குற்றஞ்சாட்டப்பட்டது.
1994 ஆம் ஆண்டிலேயே இவர் மெல்பேர்ணில் குடியேறியுள்ளார். அக்காலப்பகுதியில் இருந்தே அவர், இந்த அநாகரீக செயலில் ஈடபட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்கள், தற்போது பெரியவர்களாக உள்ளனர். இவர்கள் ஜுரிகள் சபையில் சாட்சியமளித்தனர்.
பௌத்த துறவிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட 19 குற்றச்சாட்டுகளில், 17 இல் அவர் குற்றவாளியென்பது நிரூபனமானது. ஜுரி விசாரணை நாளைய தினமும் இடம்பெறவுள்ளது.