ஆஸ்திரேலியாவில், வடக்கு பிராந்தியத்தில் (Northern Territory) வரலாறு காணாத வகையில் கடும் வெப்பம் நிலவுகின்றது.
கடும் வெப்பத்தால் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக கடந்த மாதம் 8 மில்லியன் ஹெக்டேயர் எரிந்து நாசமாகியுள்ளது. இது ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா மாநிலத்தின் நிலப்பரப்பைவிட அதிகமாகும்.
பகுதிக்கு வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 நாட்களுக்கு கடும் வெப்பம் நிலவும் என வளிமண்டயளவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.