ஆஸ்திரேலிய எதிர்க்கட்சி தலைவர் சூசன் லே, அப்பதவியில் இருந்து விரைவில் நீக்கப்படுவார் என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டுவருகின்றது. எனினும், தனது பணி தொடரும் என சூசன் லே நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஆஸ்திரேலியா சமஷ்டி ஆட்சி முறைமை நிலவும் நாடாகும். பிரதமர் அந்தோனி அல்பானீஸி தலைமையிலான லேபர் கட்சி அந்நாட்டை ஆள்கின்றது.
பிரதான எதிர்க்கட்சியாக லிபரல் கட்சி உள்ளது. அக்கட்சிக்கு சில மாதங்களுக்கு முன்னரே தலைவராக சூசன் லே நியமிக்கப்பட்டார். எதிரணியானது கூட்டணியாகவே செயற்படுகின்றது. எனவே, கூட்டணியின் தலைவராகவும் இவர் பதவி வகிக்கின்றார்.
எதிரணி கூட்டணியிலுள்ள பங்காளிக்கட்சியான நெஷனல்ஸ் கட்சி, அவ்வப்போது சூசன் லேவுக்கு தலையிடி கொடுத்துவருகின்றது.
நிகர பூஜ்ஜிய உமிழ்வு திட்டத்தை நெஷனல்ஸ் கட்சி கைவிட்டுள்ளது. இது கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி, கூட்டணியின் கொள்கை பற்றி சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்தும் பல்வேறு தகவல்கள் நிலவுகின்றன.
இந்நிலையில் இன்று, இவ்வருடம்வரை உங்கள் பதவி காக்கப்படுமா என ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு, ஆம் என எதிர்க்கட்சி தலைவர் பதிலளித்துள்ளார்.