சிட்னியில் கத்தி முனையில் கொள்ளையடித்து, பெண்ணொருவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தினார் எனக் கூறப்படும் நபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமையே இக்கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது. முகத்தை மூடிக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்துள்ள நபர் , கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளார்.
இதனால் வீட்டுக்குள் இருந்த பெண் அச்சமடைந்துள்ளார். தன்னிடம் இருந்த பணத்தை அவருக்கு கொடுத்துள்ளார். பின்னர் பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு அவர் உட்படுத்தியுள்ளார் என பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வந்த பொலிஸார் 21 வயதான சந்தேக நபரை நேற்று கைது செய்தனர்.அவருக்கு பிணை மறுக்கப்பட்டது. இன்று நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.