மத்திய குயின்ஸ்லாந்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் நால்வர் பலியாகியுள்ளனர்.
இன்று காலைவேளையிலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
தீயணைப்பு படையினர், அவசர சேவை பிரிவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை அணைத்தாலும், நால்வரும் சடலங்களாகவே மீட்கப்பட்டனர்.
ஆணொருவரும், மூன்று சிறார்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என தெரியவருகின்றது. சடலங்கள் இன்னும்முறையாக அடையாளம் காணப்படவில்லை.
தீ விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.