சிட்னி விமான நிலையம் ஊடாக ஐஸ் போதைப்பொருள் கடத்த முற்பட்ட 20 வயது யுவதி கைது செய்யப்பட்டுள்ளார்.
குயின்ஸ்லாந்தை சேர்ந்த யுவதியே இரு சூட்கேஸ்களில் மறைத்து வைத்து 39 கிலோ ஐஸ் போதைப்பொருளை கடத்தி வந்துள்ளார்.
அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து வருகை தந்த குறித்த பெண் மற்றும் அவர் கொண்டுவந்த உடமைகளை சோதித்தபோதே போதைப்பொருள் சிக்கியுள்ளது.
இக்குற்றத்துக்காக அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படக்கூடும்.