எதிர்க்கட்சி தலைவர் சூசன் லேவுக்கு எதிராக அரசியல் போரை தொடுத்துள்ளார் அவரது கட்சி செனட்டரான சாரா ஹென்டர்சன்.
சூசன் லே தலைமையின்கீழ் கட்சி திசைமாறி பயணிக்கின்றது எனவும் கட்சிக்குள் அவர் ஆதரவை இழந்துவருகின்றார் எனவும் விசனம் வெளியிட்டுள்ளார் லிபரல் கட்சி செனட்டர்.
இந்நிலையில் இது தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சூசன் லேவிடம் வினவப்பட்டது.
“ கருத்து சுதந்திரத்தை நான் மதிக்கின்றேன். மேற்படி கருத்தை வெளியிட்ட செனட்டரிடம்தான் அது பற்றி கேட்க வேண்டும்.” என்று குறிப்பிட்டார். நேரடி பதிலை அவர் வழங்கவில்லை.
எதிரணி கூட்டணியில் அங்கம் வகிக்கும் நெஷனல்ஸ் கட்சியும், எதிர்க்கட்சி தலைவர்மீது அதிருப்தியில் உள்ளது.
கடந்த மே மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் பீட்டர் டட்டன் தனது சொந்த தொகுதியில் மண்கவ்வினார். இதனையடுத்தே எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு சூசன் லே நியமிக்கப்பட்டார். எனினும், தற்போது அவரது தலைமைத்துவம் குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.